தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிஐடியூ  நிர்வாகி கொலை: உடலை வாங்க மறுத்து 3 மணி நேரம் மறியல் 109 பேர் கைது: நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி அருகே சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட இணைச் செயலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் குடும்பத்தினருடன்

News image
Updated On :29 நவம்பர் 2014, 9:15 am

முருகன்

திருநெல்வேலி அருகே சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட இணைச் செயலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் குடும்பத்தினருடன் மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று 3 மணிநேரத்துக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 19 பெண்கள் உள்பட 109 பேரை போலீஸார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியாப்பட்டியை அடுத்த திருமால் நகரைச் சேர்ந்தவர் கோபி (38). சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்கமாவட்ட இணைச் செயலராக பதவி வகித்தவர். இவரை, வெள்ளிக்கிழமை இரவுஆட்டோவில் அழைத்துச் சென்ற மர்மநபர்கள், அபிஷேகப்பட்டி அருகே வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இதையடுத்து இவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால், சடலத்தை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர், சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர், மாதர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.